தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

0 119

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை புரோக்கர் என அழைக்காமல் நில வணிகர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் , ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெயர்களில் அழைக்க அரசு தரப்பில் உத்தரவிட வேண்டும்.

கமிஷன் தொகை ஏற்கனவே 1 லட்ச ரூபாய்க்கு 2 சதவீதம் என உள்ளது அதையும் முறையாக கொடுப்பதில்லை மேலும் கமிஷன் தொகையை 3 சதவீதம் என முறைப்படுத்த வேண்டும்.

பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை இல் உள்ள அனைத்து குறைகளையும் சரி செய்ய வேண்டும்.

ரியல் எஸ்டேட் வணிகர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வாரியம் அமைக்க வேண்டும், உள்ளிட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் மலேசியா மணி, மாநில அவைத்தலைவர் அமீருதீன் , மாநில கூடுதல் செயலாளர் சக்கரவர்த்தி, மாநில செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.