தமிழ்நாடு பட்டதாரி – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்.
அனைத்திந்திய இடைநிலைக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்புடன் (A.I.S.T.F) இணைந்தது.

மாநில செயற்குழுக் கூட்டம்
தமிழ்நாடு பட்டதாரி – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு ஹோட்டலில் 29.12.2025 (திங்கள்) அன்று மாநிலத் தலைவர் திரு கி.மகேந்திரன் அவர்கள் தலைமையிலும், மாநிலப் பொதுச் செயலாளர் திரு அ.சுந்தரமூர்த்தி அவர்கள் மற்றும் மாநிலப் பொருளாளர் திரு வி.எம். கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும், சிறப்பு அழைப்பாளராக அமைப்பின் சிறப்புத் தலைவர் திரு T.சுப்ரமணியன் அவர்களும், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பின்வரும் தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றினார்கள்.
தீர்மானம் 1:
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வண்ணம் பள்ளி வளாகங்களில் உள்கட்டமைப்பு கட்டுமான பணிகளை 100% தரத்தோடும், உறுதியோடும் ஏற்படுத்திடுமாறு தமிழ்நாடு அரசை இச் செயற்குழு பெரிதும் வேண்டுகிறது.
தீர்மானம் 2:
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர், சிறுநீர் கழிப்பிட வசதி, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துவதோடு அவற்றை பராமரிப்பதை உறுதி செய்திட இச் செயற்குழு பெரிதும் வேண்டுகிறது.
தீர்மானம் 3:
கற்றல்-கற்பித்தல் செயல்பாடானது முழுக்க முழுக்க ஆசிரியர்-மாணவர் உளவியல் அடிப்படையிலானது. இவ்வேளையில் ஆசிரியர்களின் செயல்பாடுகளில் முரண்பாடு கொண்டவர்களால் சுமத்தப்படுகின்ற வீண் பழிகளை கணக்கில் கொண்டு, முழுமையான விசாரணையின்றி பொய் புகார்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்கு பதிவிட்டு கைது செய்வதை அறவே தவிர்த்திட இச் செயற்குழு வேண்டுகிறது.
தீர்மானம் 4:
உயர்த்தப்பட்ட பாடப் பொருளுக்கேற்ப இடைநிலைக் கல்வியை பயிற்றுவிக்க குறிப்பாக இயற்-அறிவியல் (Physical Science), உயிர்-அறிவியல் (Bio-Science) ஆகிய பாடங்களுக்கு தனித்தனி பட்டதாரி ஆசிரியர்கள் தேவை எனக்கருதியே, 2011-12ஆம் ஆண்டில் 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு ஒவ்வொரு பாடதிற்கும் (Subject) ஒருபட்டதாரி ஆசிரியர் வீதம் S பட்டதாரி ஆசிரியர்களும். 6,7,8 வகுப்புகளுக்கு 3 பட்டதாரி ஆசிரியர்களும் ஆகமொத்தம் 6 முதல் 10 வகுப்புகளுக்கு கற்றல்-கற்பித்தல் சிறக்க 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கினார்கள். ஆனால் தற்சமயம் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக குறைத்தது ஏற்புடையதல்ல. ஆகவே 6 முதல் 10 வகுப்பு வரை கற்றல்-கற்பித்தல் சிறக்க 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட இச் செயற் குழு பெரிதும் வேண்டுகிறது.
தீர்மானம் 5:
1.4.20035 பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்-அரசுப் பணியாளர்களுக்கு நடைமுறை படுத்தப்பட்டுள்ள தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை(CPS), நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றால் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவோம் என்று 2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதியை மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் அவர்கள் விரைந்து நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள இச் செயற்குழு பெரிதும் வேண்டுகிறது.
தீர்மானம் 6:
ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) மாண்பமை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு தமிழ்நாடு அரசு சீராய்வு மனு விண்ணப்பித்துள்ள நிலையில் உரிய நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய பதவி உயர்வுகளான முதுகலை பட்டதாரி ஆசிரியர் (post graduate teacher) மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (high school head master) பதவி உயர்வுகளை எப்போதும் போல பணி மூப்பு (seniority) அடிப்படையிலேயே வழங்கிட தமிழ்நாடு அரசினை இச்செயற்குழு பெரிதும் வேண்டுகிறது.
தீர்மானம் 7:
2004 வெவ்வேறு காலங்களில் தொகுப்பூதியத்தில் முதல் பணியமர்த்தப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் அவர்களது தொகுப்பூதிய பணிகாலத்தை (consolidated period) முறையான பணிக்காலமாக (regularisation) மாற்றி ஆணை பிறப்பித்திட இச் செயற்குழு பெரிதும் வேண்டுகிறது.
தீர்மானம் 8:
அரசாணை எண் :37 நாள் :09.03.2020ன் படி 10.03.2020-க்கு முன்னர் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதியம் (Incentive) பெறாதவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கிட, பெற்ற கருத்துருக்களை கொண்டு உடனடியாக ஊக்க ஊதியம் வழங்கிடவும், ஊக்க ஊதியம் வழங்கிடுவதில் ஒன்றிய அரசை பின்பற்றாது, பழைய முறையிலேயே (இரண்டு வழங்கிடவும் இச் செயற்குழு பெரிதும் வேண்டுகிறது. வளரூதியங்கள்)
தீர்மானம் 9:
Mphil., போன்ற உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் (Incentive) பெற்றதில் மண்டல தணிக்கை அலுவலர்களால் (regional audit) முரண்பாடாக விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கிட வழிவகை செய்திட இச் செயற்குழு வேண்டுகிறது.
தீர்மானம் 10:
மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள பள்ளித் துணை ஆய்வாளர் (D.I) பணியிடத்தை உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாக நிலை உயர்த்திட (up grade) இச் செயற்குழு பெரிதும் வேண்டுகிறது.
தீர்மானம் 11:
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான (NHIS) அரசாணையில் குறிப்பிட்டுள்ள படி அனைவருக்கும் அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளுக்கும் (குறைந்தது 24 மணி நேரம் மருத்துவ மனைகளில் தங்க நேரிடும் நேர்வுகளிலும்) கட்டணமில்லா சிகிச்சையாக (Cash Less Treatment) கிடைத்திடவும், காப்பீட்டு நிறுவனங்கள் (Insurance Companies) ஒதுக்கிடும் காப்பீட்டுத் தொகை நிறுவனத்திற்கு, நிறுவனம் மாறுபடுவதை தவிர்த்து ஒரேமாதிரியான காப்பீட்டுத் தொகை (sum assured) வழங்கிடுவதை உறுதிபடுத்திட இச் செயற்குழு பெரிதும் வேண்டுகிறது.
தீர்மானம் 12:
பணி நீட்டிப்பு ஆணை (re-employment order) பெற்று பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு காலத்திலும் பணிக்காலத்தில் ஊதியம் (payment) வழங்கியதைப் போலவே வழங்கிட்டமைக்கு நிதித் துறைக்கும், தமிழ்நாடு அரசிற்கு இச் செயற்குழு தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 13:
நாம் அங்கம் வகிக்கும் ஜாக்டோ -ஜியோ (JACTTO-GEO) பேரமைப்பு சார்பில் 10 அம்ச பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக எதிர்வரும் 6.1.2026 முதல் நடைபெறவுள்ள தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திடுவது என இச் செயற்குழு தீர்மானிக்கின்றது.
மாநிலத் தலைவர் : மகேந்திரன், மாநிலப் பொதுச் செயலாளர் : சுந்தரமூர்த்தி
மாநிலப் பொருளாளர் : கண்ணன். புரவலர், தெய்வத் .திரு. அப்பாசாமி
சிறப்புத்தலைவர் : சுப்பிரமணியன் ஆகியோரின் முன்நிலையில் நடைபெற்றது.

