சிலம்பம், குத்துச்சண்டையில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

0 2

 

கும்மிடிப்பூண்டி, சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

கும்மிடிப்பூண்டியில், ஸ்ரீ கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், பிளஸ் 1 பயிலும் மாணவன் ஹேமந்த், 16, செங்கல்பட்டில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில், தொடு போட்டி பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் வென்றார்.

அதே பள்ளியில், பிளஸ் 1 பயிலும் தேவஆகாஷ், 15, தேனி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழும போட்டியில், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்றார்.

இதன் மூலம், வரும் 27ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் நடக்கவுள்ள தேசிய அளவிலான போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளார்.

சாதித்த இரு மாணவர்களையும், பள்ளியின் நிறுவனர் திருஞானம், தாளாளர் தேன்மொழி, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.