சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி:முக்கொம்பு அணை பகுதியில், சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, ஜீயபுரம் எஸ்.ஐ.,யாக இருந்த சசிகுமார், நவல்பட்டு போலீஸ்காரர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து போலீஸ்காரர் சங்கர் ராஜபாண்டியன், ஜீயபுரம் போக்குவரத்து விட்டோடி போலீஸ்காரர் சித்தார்த்தன் ஆகியோர் 2023 அக்., 4ம் தேதி காரில் சாதாரண உடையில் முக்கொம்பு அணை பகுதிக்கு சென்றனர்.
அங்கு மது அருந்திய அவர்கள், இரண்டு காதல் ஜோடிகளிடம் தகராறு செய்துள்ளனர். அதில், அரியமங்கலம் பகுதி 17 வயது சிறுமி, துவாக்குடியை சேர்ந்த 19 வயது இளைஞர் ஆகியோரை மிரட்டி, அடித்துள்ளனர்.

