சேலத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி conclave நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் 5 இலட்சம் சொந்த நிதி கொடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்தார். இதில் தற்போது 1000 கோடிக்கும் அதிகமான நிதி கொடையாக பெறப்பட்டுள்ளது. சேலத்தில் மட்டும் 168.54 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.
முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 1828 பேர் சேர்ந்துள்ளார்கள்.
ஒட்டுமொத்த இந்தியாவில் கல்விக்காக ஒன்றிய அரசால் ஒதுக்கப்படும் நிதியை விட அதிகமாக, ஒரு மாநிலத்தில் நமது அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
பள்ளிச் சாளரம் மூலமாக சாதாரண மனிதர்களும் கூட அரசுப் பள்ளிகளுக்கு நிதி அளித்து வருகிறார்கள். இதன் மூலம் எளிய மக்களும் கல்வி வள்ளல் ஆகி வருகிறார்கள்.
சமூகத்தில் எந்த ஒரு மாற்றமாக இருந்தாலும் அது பள்ளியில் இருந்துதான் தொடங்க வேண்டும். மாணவர்களிடம் இருந்துதான் தொடங்க வேண்டும்’. ஒரு நாட்டின் வறுமை ஒழிய வேண்டுமென்றால் அந்நாட்டில் கல்வி வளர்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும் என்றால், கல்வி வளர்ச்சி அடைய வேண்டும். நன்கொடையாளர்களுக்கும் பள்ளிகளுக்கும் இடையே நாங்கள் ஒரு Coordinator மட்டுமே. ‘Person to Palli’ என்பதுதான் NSNOP-யின் நோக்கமாகும். நாங்கள் அதில் ஒரு Coordinator மட்டுமே!.

