வெளியீடு மற்றும் ஒளிபரப்பிற்காக வெளியிடப்பட்டது

தமிழ்நாடு மாநில கலை மற்றும் கலாச்சார வளங்கள்_பயிற்சி மைய தேசிய தூதுவர்_திருச்சிதிருவரம்பூர்- மூத்த ஆசிரியை எஸ்.பீபி அப்துல் நியமனம். திருச்சி_ டிசம்பர் 1 .கலை கலாச்சார துறை வளமையம் மற்றும் பயிற்சி மையம் தமிழ்நாடு மாநில பயிற்சியாளர் மற்றும் தேசிய தூதுவராக திருச்சி திருவரம்பூரைச் சேர்ந்த மூத்த ஆசிரியை எஸ் .பீபி அப்துல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் இந்திய அரசின் கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் நியூ டெல்லி யில்இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். .இந்தியாவில் புது டெல்லி, உதயப்பூர், அஸ்ஸாம், ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களில் நான்கு திசை பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல ஆசிரியர்களுக்கு சிசிஆர்டி பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 2013 முதல் பயிற்சி பெற்ற எஸ். பீபி அப்துல் பல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பல பயிற்சி பட்டறைகளை சிறப்பாக நடத்தி வருகிறார். கலை மற்றும் கலாச்சார தேசிய தூதுவராக தேர்வு செய்யப்பட்ட பீபி அப்துல் திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி (தொடக்க கல்வி )உயர்திரு மதியழகன் ஐயா அவர்களிடம் வாழ்த்துரை பெற்றார். திருவரம்பூர் வட்டார கல்வி அலுவலர்கள் திரு ஸ்டாலின் ராஜசேகர், மருதநாயகம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

