பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌.

0 3

 

 

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌.

திராவிட_மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம், திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 4, வார்டு எண் 64
வசிக்கும் மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகம் உடையான்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உடனே தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளைப் பயனாளிகளிடம் வழங்கினார்.சொத்து வரி பெயர் மாற்றம் உத்தரவு 4, நபர்களுக்கும், புதிய சொத்து வரி விதிப்பு உத்தரவு 1 நபருக்கும், பட்டா உத்தரவு 5 நபர்களுக்கும் நபர்களுக்கும், இந்நிகழ்வில் வழங்கப்பட்டது‌‌ .

மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்துபெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர்மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் மணிவேல் வட்டக் கழகச் செயலாளர்கள் ஆனந்த் துரைசாமி உதவி ஆணையர் சண்முகம், வட்டாச்சியர் விவேக் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.