பேராசிரியர் அன்பழகன் 103 வது பிறந்தநாள் அனுசரிப்பு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்தார் .

எந்திரவியல் ஆய்வகங்களின் (Robotic Labs) துவக்க விழா
இடம்:அரசு மேல்நிலைப் பள்ளி, துவாக்குடி, திருச்சி மாவட்டம்
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் இன்று (19.12.2025) திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எந்திரவியல் ஆய்வகத்தை திறந்து வைத்து, கையேடுகளை வெளியிட்டு எந்திரவியல் ஆய்வகங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் மாநில திட்ட இயக்குநர் திருமதி எம்.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள், தொடக்ககல்வி இயக்குநர் திரு.நரேஸ், இணை இயக்குநர் திரு.குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.பாலாஜி, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் திரு.தானுமூர்த்தி, துவாக்குடி நகர் மன்ற தலைவர் திரு.காயாம்பு, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

