பிரதமர் மோடி ,அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ; இன்று அமைச்சரவையை கூட்டுகிறார்!

புதுடில்லி: இந்தியா மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) முக்கிய அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார்.
ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரிகளை அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இதனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான வரி மோதல் சூடுபிடித்துள்ளது.
இந்த சூழலில் இன்று (ஆகஸ்ட் 08) பிரதமர் மோடி அவசர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துகிறார். கூட்டத்தில் பங்கேற்றும் அமைச்சர்கள் இடம் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்துவார். வரி பிரச்னை தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளையும் நடத்துவதை டிரம்ப் நிராகரித்த சூழலில் இந்த கூட்டம் நடக்க உள்ளது.
அமெரிக்காவை சமாளிப்பதற்கான எதிர்கால வழி குறித்து அமைச்சரவை விவாதித்து முக்கிய முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தனது விவசாயிகள், மீனவர்களின் நலனில் சமரசம் செய்யாது என்று பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

