என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திருச்சி

என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திருச்சி தெற்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மணப்பாறை தொகுதிக்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர், பகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பூத் வாரியாக பரப்புரை கூட்டத்தை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான
மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்சியாக திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட
மணபபாரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னம்பட்டி பேரூர் பாகம் எண் 300,
வையம்பட்டி தெற்கு குமாரவடி ஊராட்சி சடையம்பட்டி பாகம் எண் 74, மணப்பாறை ஒன்றியம் செட்டியபட்டி ஊராட்சி பாகம் எண் 145, மணப்பாறை நகரம் வார்டு எண் 1 பாகம் எண் 98, ஆகிய பகுதிகளில்
துவக்கி வைத்து பரப்புரையை மேற்கொண்டார்.
இந் நிகழ்வுகளின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் சபியுல்லா ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராமசாமி ராஜேந்திரன்
பொன்னம்பட்டி பேரூர் செயலாளர் நாகராஜ் மணப்பாறை நகர கழக செயலாளர் மு .ம செல்வம்
மணப்பாறை நகர மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ் பாக முகவர்கள் மற்றும் வட்ட வார்டு கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

