அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மழையின் காரணமாக இடிந்த வீட்டிற்கு நிதியுதவி அளித்து, வீட்டினை உடனடியாக சீரமைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட ராவத்தான் மேடு பகுதியில் மழையின் காரணமாக இடிந்த வீட்டினை இன்று (06.08.2025) நேரில் பார்வையிட்டு, வீட்டின் உரிமையாளருக்கு நிதியுதவி அளித்து, வீட்டினை உடனடியாக சீரமைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், துவாக்குடி நகர் மன்ற தலைவர் காயம்பு, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

