அன்பில் பொய்யாமொழியின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

0 9

மாவட்ட செயலாளர் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மாலை மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கழக நிர்வாகிகள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது .

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு. மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வன்னை அரங்கநாதன்
கே என் சேகரன் சபியுல்லா பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

Leave A Reply

Your email address will not be published.