காஷ்மீர் ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.,

0 2

 

ஜம்மு – காஷ்மீரில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு, வரும் 24ல் தேர்தல் நடக்கஉள்ளது.

தற்போது காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் உள்ள கட்சிகள் பலத்தின் அடிப்படையில், தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி மூன்று இ டங்களில் வெல்ல வாய்ப்புள்ளது.

பா .ஜ., ஒரு இடத்தை கைப்பற்றும். இந்நிலையில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ., நேற்று வெளியிட்டது.

ஒரு இடத்தில் வெற்றி வாய்ப்புள்ள பா.ஜ., கூடுதல் வேட்பாளர்களை அறிவித்ததால், மாற்று கட்சியில் இருந்து வேறு எம்.எல்.ஏ.,க்களை கவர பா.ஜ., முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.