வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

0 5

வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. ஜெர்மனி- தமிழகம் ஆகிய 2 பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் தான் இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலம். பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழகம். அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம். உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாக ஜெர்மனி விளங்குகிறது.

நவீன உற்பத்தி, துல்லிய பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஜெர்மனி வலிமையோடு உள்ளது. ஐரோப்பியாவின் முதுகெலும்பாக ஜெர்மனி உள்ளது. ஜெர்மனிக்கு முதலீடுகளை ஈர்க்க வந்ததற்காக பெருமை அடைகிறேன். ஜெர்மனியின் பண்பாடு, தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவை என்னை வெகுவாக ஈர்த்துள்ளது.

60க்கும் மேற்பட்ட ஜெர்மனி நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை நிறுவ தமிழகத்தை தேர்ந்தெடுத்து உள்ளன. ஜெர்மனி, தமிழகம் இடையே பொருளாதாரத்தில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில் துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில்துறையின் இதயத் துடிப்பாக தமிழகம் இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழகம் தான் இந்தியாவின் ஜெர்மனி.

பிஸ்னஸ்

வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. ஜெர்மனி- தமிழகம் ஆகிய 2 பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன். தமிழகத்துக்கு வரும் போது நீங்கள் வியாபாரத்திற்கான சண்டையாக மட்டும் பார்க்க மாட்டீங்க. உங்களுடன் இருந்து உங்கள் வெற்றியை கொண்டாடுகிற பங்குதாரர்களாக பார்ப்பீர்கள்.
araஇவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.