இன்டர்நேஷனல் குரூப் ஆஃப் அச்சுவர்ஸ் அவார்ட் 2026 நற்பவி முத்துசூர்யாவிற்கு பொதுநல மைந்தன் விருது

சென்னை தரமணி
ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆடிட்டோரியத்தில் இன்டர்நேஷனல் குரூப் ஆஃப் அச்சுவர்ஸ் அவார்ட் 2026 விழா நடைபெற்றது.
சின்னத்திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், சமூக போராளிகள், மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் 200 மேற்பட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர்கள் பல துறைகளில் சாதனை புரிந்தவர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பைன் மர பாலர் பள்ளி நிறுவனர் பவிதா தலைமையேற்று அவர்களின் குழுவினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திருமாங்கல்யம் தொடரிலும், விஜய் டிவியில் பனி விழும் மலர்வனம் தொடரிலும், ஆரியன் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் பாலா, சரண்டர் திரைப்படத்தில் நடித்துள்ள குணச்சித்திர நடிகை வர்ஷினி,
கேம் மைனே நிறுவனர் ரஹ்மான், ஸ்ரீலங்காவிலிருந்து தொழிலதிபர்கள் விஷ்ணு, நிஷாந்த்,
மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் சேது,யூடுப்பர் பிரியா மற்றும் ஸ்பெஷல் சைல்டு சாதனையாளர்கள் : யாஸ்வந்த் லட்சுமி, அருணாச்சலம் காவேரி, தமீம் மாமுதா விழாவில் கலந்து கொண்டனர்.
ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை (நிறுவனத் தலைவர்) முதன்மை பணியாளர் நற்பவி. முத்துசூர்யா அவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சிந்தனை, சமூக சேவை, உலக மக்கள் நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் தினமும் காலை 11 : 11 மணிக்கு ஒரு நிமிடம் அமைதியாக இருந்து பழகவேண்டி பொதுமக்களுக்கு துண்டு பிரச்சாரங்கள் செய்து வரும் பணியை பாராட்டி பொதுநல மைந்தன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

