கந்து வட்டி மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக மாநகர ஆட்சியரிடம் புகார்! :திருச்சி.

பொருள் : கந்து வட்டி, நில அபகரிப்பு
ஐயா ,
அனைவரும் திருச்சி மாவட்டம் தில்லை நகரில் வசிக்கும் 11 வந்து கிராஸ் நாலாவது மாடியில் வசிக்கும் கலிங்கராஜ் மகன் வடிவழகன் இவரிடம் கீழ்கண்ட சர்வே எண் உள்ள நபர்களிடம் இருந்து நிலத்தின் பெயரில் அவர்களுடைய தேவைக்காக சிறு தொகையை கொடுத்து எம் ஓடி (M O D) என்ற பெயரில் அவர்களுடைய நிலத்தையும் சுத்த கிரயம் செய்து ஏமாற்றியுள்ளார். இதில் அனைவரும் அதிகம் படிக்காதவர்களும் வெளியுலக வாழ்க்கை தெரியாதவர்களும் உள்ளனர் இவர்கள் வடிவழகனிடம் பணத்தை குடுத்து நிலத்தை திருப்பி கொடுங்கள் என்று சொன்னால் அதற்கு வடிவழகன் மறுக்கிறார் அதிக பணம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு மீண்டும் கேக்கிறார். அடியாட்களை வைத்து ஊருக்கு ஊர் மிரட்டல் விடுகிறார் அதுமட்டும் அல்லாமல் எங்களுடைய நிலத்தையும் வீடுகளையும் நோட்டீஸ் அடித்து விற்பனைக்கு உள்ளது என்று அவரவர் ஊர்களில் ஒட்டி வைத்திருக்கிறார். எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை நாங்கள் உயிரோடு இருக்கும் போதே விற்பனை செய்கிறார் ஆகையால் அய்யா அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் 12 குடும்பத்தியும் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அனுப்புநர்:
1. சகாய மேரி
2.S.கலியமூர்த்தி
3. 5.பிரபாகரன்
4. காணிக்கை லூர்து மேரி
5. மதிவாணன்
6. காவேரியம்மாள்
7. சங்கரம்மாள்
8. ஆசைத்தம்பி
9. ஸ்ரீமதி
10. D.மார்ட்டின் சுகுமார்
11. ரஞ்சனி
12. சீ. வால்டர்

