அமரர் அன்பில் பொய்யாமொழியின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் !

0 5

மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவிப்பு !

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு 28/08/2025 அன்று காலை 8.30மணி அளவில் மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்படுகின்றது.

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி,ஒன்றிய,நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

Leave A Reply

Your email address will not be published.