மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (04.10.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு ஊரக சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (04.10.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு ஊரக சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கினர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரசு ஊரக சித்த மருந்தகம், சோமரசம் பேட்டையில், சித்த மருத்துவ பிரிவு இயங்கி வருகிறது. இந்த மருத்துவ பிரிவு சுமார் 60 ஆண்டு காலமான பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் 50 முதல் 60 நோயாளிகள் வரை வெளி நோயாளிகளாக வந்து சித்த மருத்துவம் பார்த்து பயன் பெற்று வருகின்றனர்.

கட்டிடம் பழுதடைந்துள்ளதால் புதிய கட்டடத்திற்கு நேஷனல் ஆயுஸ் மிஷன் மூலமாக ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தில் மருத்துவர் ஆலோசனை அறை, யோகா செய்யும் அறை, மருத்துவ சிகிச்சை செய்யும் அறை. மருந்துகள் விநியோகிக்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ள இக்கட்டிடத்திற்கு மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப, அவர்கள். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கங்காதாரணி. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் திருமதி.மா.வத்சலா மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

