மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் இன்று நடைபெற்ற விழாவில் பேரூராட்சிகளில் 9 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற 2 பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

0 48

 

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  கே. என். நேரு  திருச்சிராப்பள்ளி மாவட்டம், எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் இன்று (02.08.2025) நடைபெற்ற விழாவில் பாலகிருஷ்ணம்பட்டி, மண்ணச்சநல்லூர், தாத்தையங்கார்பேட்டை, சிறுகமணி, காட்டுப்புத்தூர், புள்ளம்பாடி ஆகிய 6 பேரூராட்சிகளில் ரூ.12.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ச.கண்ணனூர் மற்றும் சிறுகமணி ஆகிய 2 பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார்.

 

பேரூராட்சிகளில் ரூ.3.92 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை  அதன்படி, மூலதன மானிய நிதிதிட்டத்தின்கீழ் பாலகிருஷ்ணம்பட்டியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கும், மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கும்,தாத்தையங்கர்பேட்டை பேரூராட்சியில் 5.1.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கும், சிறுகமணி பேரூராட்சியில் அயோத்தி தாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் மேம்பாடு செய்யும் பணிக்கும், சிறுகமணி பேரூராட்சியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதிதிட்டத்தின்கீழ் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் வாரச் சந்தை மேம்பாடு செய்யும் பணிக்கும். ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் மேம்பாடு செய்யும் பணிக்கும், ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் நீரேற்றும் பிரதான குழாய் அமைக்கும் பணிக்கும், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் ரூ.94 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் மேம்பாடு செய்யும் பணிக்கும், புள்ளம்பாடி பேரூராட்சியில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் நான்கு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கும் என மொத்தம் ரூ.12.23 கோடி மதிப்பீட்டில் 6 பேரூராட்சிகளில் புதிதாக அமைக்கப்படவுள்ள 9 திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி, திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். 

 தொடர்ந்து, சிறுகமணி பேரூராட்சியில் அயோத்தி தாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.46 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சமுதாயக் கூட கட்டிடத்தையும், ச.கண்ணனூர் பேரூராட்சியில் ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடத்தையும் என 2 பேரூராட்சிகளில் மொத்தம் ரூ.3.92 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும் ,மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் , நகர்ப்புற பகுதியில் வீடு கட்டி குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு வரைமுறைப்படுத்தி 20 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் சட்டமன்ற உறுப்பினர்கள் சீ.கதிரவன் (மண்ணச்சநல்லூர்), திரு.ந.தியாகராஜன் (முசிறி), மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் க.வைரமணி. எஸ்.கண்ணனூர் பேரூராட்சித்தலைவர் சரவணன், திருச்சிராப்பள்ளி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கோ.துவாரகநாத்சிங், செயற்பொறியாளர்கள், செயல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.