மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இயந்திரம் புதை வடிகால் வண்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

0 2

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று (27.12,2025) நடைபெற்ற விழா நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பை நீக்கும் வகையில் ரூபாய் 3.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக வரப்பெற்ற சூப்பர் சக்கர் ரீசைக்கிளினர் (Super Sucker Cum Jetting with Recycling Facility Vechcle) மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று (27.12.2025) நடைபெற்ற விழா நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பை நீக்கும் வகையில் ரூபாய் 3.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக வரப்பெற்ற சூப்பர் சக்கர் ரீசைக்கிளினர் வாகனத்தை (Super Sucker Cum Jetting with Recycling Facility Vechcle) மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 15 வது மத்திய நிதிக்குழு பரிந்துரை நிதி ரூபாய் 3.78 கோடி மதிப்பீட்டில் 2024-25ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை தலைப்பு நிதியின் கீழ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் புதைவடிகால் அதிக ஆழமுள்ள ஆள் இறங்கு குழிகளில் ஏற்படும் அடைப்புகளை உடனடியாக நீக்குவதற்கு மற்றும் மறுசுழற்சி வசதியுடன் கூடிய அதிநவீன சூப்பர் சக்கர் கம் ஜெட்டிங் (Super Sucker Cum Jetting with Recycling Facility Vechcle) வாகனம் 13,000 லிட்டர் தொட்டி கொள்ளளவு கொண்டது. அதிக உறிஞ்சும் திறன் மற்றும் அடைப்பு நீக்கும் திறன் கொண்ட அதி நவீன வகை கனரக வாகனமாகும்.

மேலும் வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரம் புதை வடிகாலில் உள்ள குப்பை மற்றும் மண். கல் போன்ற அனைத்துக் கழிவுகளையும் மொத்தமாக உறிஞ்சி எடுத்து, பின்னர் குப்பை மற்றும் மண் கழிவுகளை மட்டும் தனியாக சேகரித்து வைத்துக் கொண்டு தண்ணீரை மட்டும் புதை சாக்கடையில் வடிகாலில் விட்டுவிடும். இவ்வாறு செயல்படுவதன் மூலம் புதை சாக்கடைகளில் அடைப்புகள் அகற்றப்பட்டு கழிவுநீர் எளிதாக செல்லும்.

இவ்வாகனம் மூலம் மாநகர பகுதிகளில் உள்ள புதை வடிகால் Machine hole மிகவும் எளிதாகவும் குழிகளில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடனும் நீக்க இயலும். மேலும் உச்சநீதி மன்றத்தின் உத்திரவின்படி இப்பணியில் Machine hole குழிகளில் மனித ஆற்றல்களின் ஈடுபாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டும், தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிநேரம் குறைக்கப்பட்டும் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றியும் மாநகராட்சி பகுதிவாழ் பொதுமக்களுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலும் ஏற்படுகிறது. மேற்கண்ட வாகனம் மூலமாக மேற்கொள்ளப்படும் பணியானது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கழிவுநீர் மேலாண்மை பணியில் ஒரு மைல் கல் ஆகும்.

இந்நிகழ்வில், நகராட்சி நிருவாக இயக்குநர் திரு.ப.மதுசூதன் ரெட்டி.இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன்,இ.ஆ.ப.,அவர்கள், நகரப்பொறியாளர் திரு.சிவபாதம், செயற்பொறியாளர் திரு.பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.