மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்துசெயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தனது திருவெறும்பூர் தொகுதிக்கு தேவையான கிளை நீதிமன்ற அமைப்பது குறித்து கோரிக்கை மனு அளித்தார்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கிளை நீதிமன்றங்கள் உள்ள நிலையில், எனது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மையப் பகுதியான திருவெறும்பூரில் கிளை நீதிமன்றம் அமைத்து தர ஆவண செய்ய வேண்டுமென சட்டத்துறை அமைச்சரிடம் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

