மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்காணொளிக் காட்சி வாயிலாகபுதிய பாரா விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று (14.08.2025) திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பாரா விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்ததைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அவர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்தார்.
விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் பாரா விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் பாரா-விளையாட்டு அரங்கம், அரைவட்ட திறந்தவெளி மேற்கூரை கொண்ட பாரா இறகுப்பந்து, உட்கார்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து. பாரா டேபிள் டென்னிஸ். பாரா போச்சியா (Boccia). பாரா டேக்வொண்டோ. ஜுடோ ஆடுகளம், பாரா கோல்பால் (Goal ball) விளையாட்டுகளுக்கான பன்னோக்கு உள்விளையாட்டரங்கம். பாரா பளுதூக்குதல் அடங்கிய உடற்பயிற்சிக்கூடம், சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வுதளம் கொண்ட ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறைகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் (14.08.2025) திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பாரா விளையாட்டு அரங்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், அவர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்து, அரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டார்.
அவர்கள், இந்நிகழ்வில், மாண்புமிகு மாநகராட்சி மேயர் அன்பழகன் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தி. விளையாட்டு விடுதியின் மேலாளர் கண்ணன், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

