மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் கேகே நகர், ஐயப்ப நகரில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய நூலக கட்டிடத்தை இன்று (26.09.2025) திறந்து

0 4

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் கேகே நகர், ஐயப்ப நகரில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய நூலக கட்டிடத்தை இன்று (26.09.2025) திறந்து வைத்ததை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி ஐயப்பா நகரில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

 

இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.இனிகோ இருதயராஜ்,மண்டல குழு தலைவர் திரு.மு.மதிவாணன், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் திரு.அருள், மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.சரவணக்குமார், 63 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.பொற்கொடி, அரசுத்துறை அலுவலர்கள், வாசகர் வட்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.