மாண்புமிகு நகராட்சி நிறுவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் வணிகம் பார்வை.

0 3

மற்றும் வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளையும் மற்றும் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடியின் கட்டுமானப் பணிகளையும் இன்று (26.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்துகள் வந்து செல்லும் வகையில் மூலதன மானிய நிதி மற்றும் மாநகராட்சி நிதியிலிருந்து ரூபாய் 17.60 கோடி மதிப்பீட்டில் அனைத்து நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து (Omni Busstand) நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும், மேலும், ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில் 5.20 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 144.58 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு பயன்பாட்டு வசதிகளுக்கான சேவை மையக்கட்டடம் (Multi Utility Facilities Centre) நான்கு தளத்துடன் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளையும் மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பஞ்சப்பூரில் 11.68 ஏக்கர் பரப்பளவில் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி நிதி, மூலதன மானிய நிதி மற்றும் மாநகராட்சி நிதியின் கீழ் ரூபாய் 236 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும், மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைவாக மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர்

சரவணன், மாண்புமிகு மாநராட்சி மேயர்

அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், 

நகரப் பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர்

வைரமணி, செயற்பொறியாளர்

பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர்

வேல்முருகன், உதவி ஆனையர்,சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.