தங்க வியாபாரியிடம் ரூ.33 லட்சம் பறிப்பு

0 31

தங்க வியாபாரியிடம் ரூ.33 லட்சம் பறிப்பு சாத்தனூர்   இச்சிக்காமலைப்பட்டியை சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது இப்ராகிம். இவர் திருச்சி ஆழ்வார்தோப்பை சேர்ந்த முகமது உவைஸ்(32), முகமது அஷ்ரப்(30), தவ்பிக் மற் றும் முஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து தங்க கட்டி வணிகம் செய்து வந்தார். முகமது இப்ராகிம் மற்றும் முகமது உவைசுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்ராகிம் நேற்று முன்தினம் பெரிய கடைவீதியில் உள்ள ஒரு கடையில் 7 தங்க கட்டிகளை விற்று ரூ. 33 லட்சத்தை பெற்றார். பின்னர் பெரிய கடைவீதி அருகே வந்தபோது முகமது உவைஸ் மற்றும் அவரது

கூட்டாளிகள் சேர்ந்து இப்ராகிமிடருந்து ரூ.33  லட்சத்தை பறித்து கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.