நான்கு சக்கர வாகனத்தில் 40 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது

திருச்சிராப்பள்ளி மாவட்டம். சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் உள்ள குமரன் பேக்கரி அருகே நேற்று (06.09.2025) மாலை 0300 மணியளவில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ஞானசேகரன் அவர்களில் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து ராம்ஜிநகரை நோக்கி சென்ற TN 21 AQ 2552 என்ற பதிவெண் கொண்ட வோல்க்ஸ்வாஜென் காரினை தடுத்து நிறுத்தி சோதனை செய்த முன்றபட்ட போது மேற்படி காரினை ஓட்டி வந்த நரேந்திரன் @ நரேன் 25/25, S/o தணிகாசலம், காந்தி நகர், ராம்ஜி நகர் என்பவர் தப்பி ஓட முயன்றவரை காவலர்கள் பிடித்து காரினை சோதனை செய்ய போது காரில் 40 கிலோ கஞ்சா (மதிப்பு ரூ.4,00,000/-) போதை பொருளினை விற்பனைக்காக கடத்தி சென்றுள்ளார்.
2 கிலோ மேற்படி எதிரி நரேநத்தினை மேற்கொண்டு விசாரணை செய்த போது தான் ஆந்திரா மாநிலத்திலிருந்து 44 கிலோ கஞ்சாவை எடுத்து வந்து திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் காரினை நிறுத்தி 1) அனிதா, க.பெ. கார்த்திகேயன், பிச்சாண்டார்கோவில், மண்ணச்சநல்லூர் தாலுகா என்பவரிடம் கஞ்சாவினையும், 2) புவனேஸ்வரி. க.பெ தணிகாசலம், பிச்சாண்டார்கோவில், மண்ணச்சநல்லூர் தாலுகா என்பவரிடம் 2 கிலோ கஞ்சாவினையும் விற்பனைக்காக கொடுத்துவிட்டு வந்ததாக கூறியதின் பேரில் மேற்படி எதிரியான நரேந்திரன் என்பவரை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதுடன், மற்ற இரண்டு எதிரிகளான புவனேஸ்வரி மற்றும் அனிதா ஆகிய இருவரையும் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகிறனர்.
மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் பிற போதை பொருட்களை கடத்தி செல்லும் நபர்கள் மீதும், விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளர்.

