தந்தை பெரியார் நினைவு 52 ஆம் ஆண்டு நாள் அனுசரிப்பு !

மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 52 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி காட்டூர் திருச்சி தஞ்சை ரோட்டில் அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர்
மு மதிவாணன் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் மாநில அணி நிர்வாகி செந்தில் பகுதி கழக செயலாளர் நீலமேகம் மற்றும் மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

