கணவனே கைவிட்டாலும் கல்வி கைவிடாது என கூறிய கலைஞரின்மகன் புதுமைப்பெண் திட்ட மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.

0 3

திருவெறும்பூர் டிச 16

கணவனே கைவிட்டாலும் கல்வி கைவிடாது என கூறிய கலைஞரின்மகன் புதுமைப்பெண் திட்ட மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்

திருவெறும்பூர் வடக்குஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தைப்பார் பேரூராட்சியில் உள்ள ஜெய் நகர் பகுதியில் தமிழக துணை முதல்வரின்பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார்,

மேலும் கூட்டத்துக்கு வருகை புரிந்த அனைவரையும் கூத்தைபார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் வரவேற்றார் மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன், இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் , மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது ஒரு மாநாடு என்றால் ஒரு கூட்டம் என்றால் எவ்வாறு நடத்திட வேண்டும் என்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திருவண்ணாமலையில் ஒரு மாபெரும் வெற்றி மாநாட்டை நடத்திக் காட்டியவர் தான் நமது தமிழக துணை முதல்வர் என்றும் இன்றைய இளைய சமுதாயத்தை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக எவ்வாறு ஒழுக்கமாக நடத்திட வேண்டும் என அந்த கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் ஒரு கோடி மக்கள் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தாலும் அது தேவையில்லை என்றும் ஒழுக்கமான ஒரு லட்சம் இளைஞர்கள் கட்டுப்பாட்டோடு இருந்தால் அதுவே போதும் என்ன உரையாற்றியவரின் பிறந்த நாளை தான் இன்று நாம் கொண்டாடி வருகிறோம் என்றும் மேலும் திருச்சி மாவட்டம் எனது சொந்த ஊராக இருந்தாலும் திருவரம்பூர் என்பது எனது சொந்த வீடு என்றும் மேலும் இதே கூத்தைப்பர் பேரூராட்சியில் இதுவரை 2021 முதல் 25 வரை சாலை வசதி குடிநீர் வசதி மழைநீர் வடிகால் வசதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பயணியர் நிழற்குடை படித்துறை அமைத்தல் என இதுவரை இந்த கூத்தாடி பார் பேரூராட்சிக்கு 23 கோடியை 64 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் செய்து பயன்பாட்டிற்கு நாம் கொண்டு வந்துள்ளதாகவும்

மேலும் நமது தமிழக முதல்வர் அவர்கள் எங்களிடம் அடிக்கடி கூறுவது மக்கள் நம்மை நம்பி வாக்களித்துள்ளனர் என்றும் எனவே அவர்கள் நம்பிக்கையை காக்கும் வகையில் அவர்களின் தேவையை அனைத்தையும் நாம் பூர்த்தி செய்வதே நமது தலையாய கடமையாக கருத வேண்டும் என கூறி வருவதாகவும். நம் நெஞ்சமெல்லாம் வாழும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பெண் பிள்ளைகளை எட்டாம் வகுப்பு 12ஆம் வகுப்பு வரை படிக்க வையுங்கள் நான் கல்வித் தொகை தருகிறேன் கணவனே கைவிட்டாலும் கல்வி அவர்களை கைவிடாது என அவர் எடுத்துரைத்ததாகவும் ஆனால் அவரது மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெண் பிள்ளைகளை பள்ளியில் இருந்து கல்லூரி படிப்பு இரண்டாண்டாக இருந்தாலும் மூன்று ஆண்டாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகளாக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி கல்வி வழங்குவோம் என எடுத்துரைத்தவர் தான் தமிழக முதல்வர் என்றும் மேலும் அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் இன்று அவருக்கு உறுதுணையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக துணை முதல்வரின் பிறந்த நாளில் நாம் அனைவரும் மீண்டும் திராவிடம் மாடல் நாயகரின் திராவிட மாடல் ஆட்சி மலர பாடுபடுவோம் என சூளுரைப்போம் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.