புதிதாக கர்மவீரர்காமராசர் பெயரில் அமைய உள்ள அறிவுசார் நூலக வளாகத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா.
திருச்சி மாநகரில் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரில் அமையவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மைய வளாகத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – கல்லூரிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளையோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தினர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த அறிவுச்சுரங்கத்தை உருவாக்குவதில் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொண்டுள்ள ஈடுபாடு குறித்தும், என்னென்ன வகையான நூல் பிரிவுகள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அரங்குகள், குழந்தைகளுக்கான பிரத்யேக பிரிவு உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் நூலகம் அமையவுள்ளது என்பதையும் குழந்தைகளுக்கு டிஜிட்டல் துறையின் மூலம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அமைச்சர் இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு. மதிவாணன் வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி மற்றும் அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


