திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனடைந்த பொதுமக்கள்

0 3

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனடைந்த பொதுமக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் நன்றியை தெரிவித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி த்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், இன்னுயிர் காக்கும் நம்மைக் காக்கும் 48, புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர், கலைஞரின் கனவு இல்லம் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் கடைக்கோடியில் வாழக்கூடிய நபர்களுக்கும் சென்றடையும் வண்ணம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் இவ்வரசு செயல்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.