டால்மியாபுரம் (கல்லக்குடி) அருகே உலக சமாதான மைதானம் தொடக்கம் சௌந்தர பாண்டியன் எம் எல் ஏ பங்கேற்பு

0 11

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் (டால்மியா தொழிற்சாலையில் பகுதி) கல்லக்குடி டோல் பிளாசா அருகில் , தேசிய நெடுஞ்சாலையில் பிப்ரவரி 5
( கீழரசூர்,மேலரசூர்
முதுவத்தூர்
ஊர்களுக்கு இணைப்பு பாலமான மானோடை கரையில்) உலக சமாதான மைதானம் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இவ்விடத்தில் தினசரி அன்னதானமும்- விளையாட்டு மைதானமாக அமைத்து பல ஊர்களில் இருந்து தனித்திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு மாவட்ட, மாநில, தேசிய அளவில் பங்குபெற அவர்களுக்கு ஊக்குவித்து தேவையான உதவிகளை செய்து தர உள்ளதாக நற்பவி. முத்துசூர்யா கூறினார்

விழாவில் கீழரசூர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் நற்பவி.முத்துசூர்யா வரவேற்று பேசினார். வைகோ ராமசாமி, ராமசுந்தரம், சாத்தப்பாடி குமார், மல்லபிள்ளை, சுப்பிரமணியன், தர்மராஜ், தீபக் அண்ணா நகர் ராஜேந்திரன், அஜித்குமார் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

கீழரசூர் ஊராட்சியில் 2004 ல் இருந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருவதை பாராட்டி மேலும் 2025-ல் ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை தொடங்கி செயல்பட்டு வரும் முதன்மை பணியாளர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டு மேலும் மேலும் வளர வேண்டும் என்றும் தன்னால் இயன்ற உதவிகளை முழுவதுமாக ஒத்துழைப்பு தருவதாகவும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் அவர்கள் உறுதியளித்தார்.
கீழரசு ஊராட்சியில் நற்பவி. முத்துசூர்யா பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்து 2004 ல் நாளிலிருந்து 20 ஆண்டுகளாக தங்களால் முடிந்த சின்ன சின்ன சேவைகளை செய்து வந்த நிலையில் 2025 பிப்ரவரி மாதம் ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளையாக பதிவு செய்து செயல்பட்டு வரும் முதன்மை பணியாளர் (நிறுவனத் தலைவர்), நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் சிறப்பாக செயல்பட்டு மேலும் மேலும் வளர வேண்டும் என்றும், தன்னால் முடிந்த உதவிகளை முழுவதுமாக ஒத்துழைப்பு வருவதாகவும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் அவர்கள் உறுதியளித்தார்.
லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் அவர்கள்

ஜனவரி 31 முதல் தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருவதை எடுத்துக் கூறி தொடர்ச்சியாக உபயோதாரர்கள் விரும்பி அளிக்கக்கூடிய தொகைக்கு ஏற்ப உணவு தயாரித்து வழங்கப்பட இருப்பதாகவும் இந்த அன்னதானம் உலக மக்கள் நன்மைக்காகவும் உலக அமைதிக்காகவும் வழங்கப்படும் அன்னதானமாக செயல்படும் என்றும், திருச்சி டு அரியலூர் சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரச்சாரம் கொடுத்து அன்னதானம் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.