திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வங்கி கடனுதவிகளை வழங்கபட்டது

0 16

      திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று  மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பால்வளத்துறையின் சார்பில் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வங்கி கடனுதவிகளை வழங்கி உரையாற்றினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பால்வளத்துறையின் சார்பில்  (31.07.2025) நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கும். கூட்டுறவு சங்கங்களுக்கும் வங்கி கடனுதவிகளை வழங்கி உரையாற்றினார்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் தெரிவித்ததாவது:

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றது முதல் விவசாய பெருங்குடிமக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக விவசாய பெருங்குடிமக்களுக்கு பால் விலை ரூ.3 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு விவசாய பெருங்குடிமக்களுக்கு பால் விலை உயர்த்தி வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.3 ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு, வழங்கப்பட்டுள்ளது. மேலும், தரமான பால் தருகின்ற விவசாயிகளுக்கு மேலும் ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தரத்திற்கேற்ற விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என பல்வேறு விவசாய பெருங்குடிமக்கள் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, spot acknowledgement machine வைக்க அறிவுறுத்தி அதன் மூலம் ரூ.3 முதல் ரூ.5 வரை அதிகமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் விவசாய பெருங்குடிமக்களுக்கு கடந்த ஆண்டில் மட்டும் கடனுதவியாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.365 கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாடுகளுக்கு வழங்கப்படுகின்ற தீவனம் 16 சதவீத புரத சத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மாடுகளுக்கு காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சங்கங்களின் வருவாய் இலாபத்திற்காக 1 கிலோ மாட்டு தீவனம் விற்பனை செய்தால் ரூ.1 கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் மாதந்தோறும் குறிப்பிட்ட வருவாய் ஈட்டி வருகிறார்கள். அதில் 60 சதவீதம் சங்க உறுப்பினர்களின் ஊதியத்திற்கும். 40 சதவீதம் கூட்டுறவு சங்க மேம்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் இயன்றவரை கடந்த ஆண்டே தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 10,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் நிலைத்த, நீடித்த பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையும் வகையில் உரிமம் (License) வழங்க முன்வந்து பல்வேறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் விற்பனையாளர்களாக மாறி 200-க்கும் மேற்பட்ட ஆவின் பொருட்களை விற்பனை செய்து பலன் பெற்று வருகிறார்கள்.

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2 மைக்ரோ ஏடிஎம்கள் வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு சிக்கன நடவடிக்கையின் மூலம் மாதந்தோறும் 52 இலட்சம் மின் சேமிப்பு செய்யப்படுகிறது.

மேலும், விவசாய பெருங்குடிமக்கள் அனைவருக்கும் கால்நடைகள் வாங்குவதற்கும், சிறு பால்பண்ணைகள் துவங்குவதற்கும் கடன் தொகை கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து விவசாய பெருங்குடிமக்களும் கடனுதவிகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு. கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பால்வளத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களும் முழுமையான இலாபத்துடன் செயல்புரியும் நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்காக மாநில அளவில் 400 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு PMEGP திட்டத்தின் கீழ் 81 பயனாளிகளுக்கு ரூ.239 இலட்சம் மதிப்பில் 35% மானியத்துடன் கூடிய கறவை மாட்டுக் கடனும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு TAHDCO திட்டத்தின் கீழ் 43 பயனாளிகளுக்கு ரூ.71 இலட்சம் மதிப்பில் 35% மற்றும் 50% மானியத்துடன் கூடிய கறவை மாட்டுக் கடனும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு (KCC) கிஸான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் 72 பயனாளிகளுக்கு ரூ.38.88 இலட்சம் மதிப்பில் கறவை மாட்டு பராமரிப்பு கடனும், தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை பல்வகை சேவை மையங்களாக உருவாக்கும் பொருட்டு 3 சங்கங்களுக்கு குறுதானியங்கி இயந்திரம் (Micro ATM) வழங்கியும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு சங்கத்தின் உபரி இலாபத்தில் இருந்து 1,702 பயனாளிகளுக்கு ரூ.311.15 இலட்சம் மதிப்பில் கூடுதல் கொள்முதல் விலை வழங்கியும், சங்கம் இல்லாத வருவாய் கிராமங்களில் புதிதாக 2 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பதிவு செய்ததற்கான பதிவு சான்றிதழ் வழங்கியும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர் சங்கங்களுக்கு உடனடி ஒப்புகை சீட்டு வழங்கும் பொருட்டு 78 சங்கங்களுக்கு ரூ.44.72 இலட்சம் மதிப்பில் 100% மானியத்துடன் கூடிய பால் சோதனை கருவிகள் (Everest Analyzer) வழங்கியும். பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு சினை ஊசி இல்லம் தேடி வழங்குதல் பொருட்டு கிராம நிலை ஊழியர்களுக்கு 100% மானியத்துடன் கூடிய 3-4 லிட்டர் திரவ நைட்ரஜன் குடுவைகள் டிஆர்டி.2286 டாப் செங்காட்டுப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.6000/- மதிப்பிலும், தாட்கோ திட்டத்தின் கீழ் இடுபொருள் விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையம் அமைப்பதற்கு டிஆர்டி 2286 டாப் செங்காட்டுப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.4.50 இலட்சம் மதிப்பில் 35% மானியத்துடன் கடனுதவிகளும் என மொத்தம் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது எனவும், தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களையும் விவசாய பெருங்குடிமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் தொடக்கப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அரசுத்துறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்துதல் குறித்து பால்வளத்துறைக்கு தொடர்புடைய பிறதுறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப.. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பால்வளத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஆவின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி அரங்கினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் / ஆவின் பொது மேலாளர் திருமதி.முத்துமாரி அவர்கள், துணைப்பதிவாளர் (பால்வளம்) திரு.நாகராஜ் சிவக்குமார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் திரு.ஸ்ரீராம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.