திருச்சியில் வரும் 11ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது

திருச்சியில் வரும் 11ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதனை முன்னிட்டு பஞ்சப்பூர் அருகே நடைபெற்று வரும் மாநாட்டு பணிகளை முன்னாள் அமைச்சர் கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி, தலைமையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார், மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், அரியலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் கொறடா தாமரை ராஜேந்திரன், கழக அமைப்பு செயலாளர் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ இளம்பை தமிழ்செல்வன்

கழக அமைப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், முன்னாள் எம்எல்ஏ, இந்திரா காந்தி,, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

