சி ஐ டி யு அமைப்பினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 10

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி வந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும்.

அரசு பணத்தில் சில ஆயிரம் கோடி செலவு செய்து உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தனியார் நிறுவனம் வாடகை கொள்ளை நடத்த அனுமதிக்க கூடாது.

சாலையோர வியாபாரிகள் பஞ்சப்பூர் பேருந்து நிலைய சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதை தடை செய்யக்கூடாது.

மத்திய பேருந்து நிலைய வளாகம் முழுவதும் பேருந்து நிலையமாகவே தொடர்ந்து செயல்பட வேண்டும். வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது உள்ளிட் உ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு திருச்சி மாநகர் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தொடர் முழக்க போராட்டம் ந போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார்,

போராட்டத்தை விளக்கி தரைக்கடை சங்க மாவட்ட
மாவட்ட செயலாளர் செல்வி,
சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் கண்டனங்கள் தெரிவித்து கோஷங்கள் முழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தரைக்கடை வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.