கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு மானியத் தொகை வழங்குதல்.

0 8

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு மானியத் தொகை வழங்குதல்.

தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயத்திற்கு வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது. அவ்வாறு ஒரு தேவாலயத்திற்கு மானியத் தொகை வழங்கிய பின்னர் 5 வருடத்திற்கு அத்தேவாலயம் இம்மானியத்தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது. மேற்படி திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும். கட்டடத்தின் வயதிற்கேற்ப மானியதொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.

கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம்

தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pedestal in Churches), கழிவறைவசதி அமைத்தல் (Construction of Toilet facilities), குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Construction of Drinking water facilities), சுவிஷேம் வாசிக்கும் ஸ்டான்ட், மைக்செட் (ம) ஒலிப்பெருக்கி அமைத்தல், நற்கருணை பேழைபீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டான்ட்கள் (ம) பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல்.

தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம்

10-15 வருடம் வரை இருப்பின் ரூ.10.00 இலட்சம், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.15.00 இலட்சம், 20 வருடங்களுக்குமேலிருப்பின் ரூ.20.00 இலட்சம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.