போலியான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக: அண்ணாமலை.

0 4

போலியான வாக்குறுதிகளால் தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை.

கடந்த 2023 செப்டம்பரில், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம், அது 72% ஆனது. இன்று, 80% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறுகிறார். இது முழுக்க முழுக்க, மக்களை ஏமாற்றும் நாடகம்.

போலியான வாக்குறுதிகளால் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.