பிஜேபி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏந்தி பேரணி
இந்தியா முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது
அதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக செல்லும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி ஶ்ரீரங்கம் மண்டல பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில் மூவர்ணக் கொடியான தேசியக்கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது பேரணியை Dr.S.சிவசுப்ரமணியம் ( பார்வையாளர் மாநில இணை பொருளாளர்) துவக்கி வைத்தார்

இந்த பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்துடன் பங்கேற்றனர்.

