திருச்சி கேர் அகாடமியில் “சிகரம் நோக்கி” வெள்ளி விழா.

0 6

திருச்சி – கேர் அகாடமி,

“சிகரம் நோக்கி” வெள்ளி விழா.

முன்னால் தலைமை செயலாளர், டாக்டர் வெ. இறையன்பு கலந்து கொண்டார்.

திருச்சி கேர் அகாடமியில் “சிகரம் நோக்கி” எனும் கல்வி நிகழ்ச்சி 10.8.2025 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை நடைபெற்றது.

திருச்சி கேர் அகாடமியில்  “சிகரம் நோக்கி” எனும் கல்வி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 32 ஆண்டு கால கல்வி அனுபவம் மிக்க இந்த கேர் அகாடமி கல்வி மையத்தின் இது, 25ஆம் ஆண்டாக நடத்தப்படும். சிகரம் நோக்கி வெள்ளி விழா நிகழ்ச்சி. இவ்விழாவிற்கு கேர் அகாடமி இயக்குனர் பேராசியர் D. முத்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். Dr. M. தமிழன்பன் வரவேற்புரை வழங்கினார். முன்னாள் தலைமை செய்லாளர் Dr. வெ. இறையன்பு I.A.S அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

டாக்டர் ஆனர்தகிருஷ்ணன்,  கிருஷ்ணவேணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் இடைநிலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இம்மையத்தில் படித்த 20 பேர் TNPSC மூலம் அரசு அதிகாரிகளாக பணியேற்றோர் இருவர். இம்மையத்தில் படித்து +2, 10 ஆம் வகுப்பு மத்திய மற்றும் மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் உட்பட ஏராளமானோர் கெளரவிக்கப்பட்டனர். விழாவில் 25 ஆண்டு கால நிகழ்ச்சிகளின் தொகுப்பாக “காலடி சுவடுகள்” எனும் “டிஜிட்டல் AV” வெளியிடப்பட்டது. டாக்டர் வெ.இறையன்பு வெளியிட, பேராசிரியர் Dr. மாரிமுத்து, Dr. பிச்சுமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிறைவாக ,Dr. இளந்தமிழன் நன்றி கூறினார். விழாவில் இந்த ஆண்டு முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு தயாராகும் நூற்றுக்கணக்கானோர் உட்பட ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.