அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளான பணிக்கெரடை வழங்கிடகோரி… அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம்

0 5

 

அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளான பணிக்கெரடை வழங்கிடகோரி… அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் 50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடி
வருகிறோம்.

இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களும், உதவியாளர்களும் இதுநாள் வரை நிரந்தரமாக்கப் படவில்லை.

இந்த திட்டத்தில் கணவனால் கைவிடப்பட்டார்கள் மற்றும் கைம்பெண்கள், பெருபான்மையோர் பணியாற்றி வருகிறார்கள். வளர்இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம், முறையான குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

எனவே இந்த ஆளும் விடியல் அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு வாழ்வில் விடியலை வழங்கிட வேண்டும் என வலியறுத்தி மாநிலம் தழுவிய தழனியமாலை நேல ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாழர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி 26 ஆயிரம் வழங்கவெண்டும்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரம் அகவிலைப்படியுடன்வழங்க வேண்டும் .

அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக ரூபாய் 10 லட்சமுமம் உதவியாளருக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்கிடுக.

மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் மல்லிகா பேகம், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். ராணி, மாவட்ட பொருளாளர் முன்னிலை வகித்தார் . விளக்க உரை சித்ரா, மாவட்ட செயலாளர். வாழ்த்துரை ரங்கராஜன்,சி ஐ டி யு மாவட்ட செயலாளர் கலைச்செல்வி, நன்றியுரை மற்றும் அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.