அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் டிரம்ப்புக்கு இருந்த தொடர்பை உறுதி செய்யும் ஆவணம் வெளியீடு

0 1

வாஷிங்டன்: அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் டிரம்ப்புக்கு இருந்த தொடர்பை உறுதி செய்யும் ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடாமல் இருந்த ஆவணங்களை நீதிமன்ற உத்தரவை அடுத்து புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. 1980களில் டிரம்புக்கு தன்னை எப்ஸ்டீன் அறிமுகப்படுத்தியதாக பெண் ஒருவர் அளித்த வாக்குமூலம் வெளியிடப்பட்டுள்ளது. தனக்கு 13 -15 வயது இருக்கும்போது டிரம்புக்கு தன்னை எப்ஸ்டீன் அறிமுகப்படுத்தியதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். நியூயார்க் (அ) நியூ ஜெர்ஸிக்கு தன்னை எப்ஸ்டீன் அழைத்துச் சென்று டிரம்ப்புடன் அனுப்பியதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.