வாலிபருக்கு அரிவாள் வெட்டு!

திருச்சி, தென்னூர், ஆழ்வார் தோப்பு பகுதியில்
கோழி கடை நடத்தி வருபவர் ஆசிக் ரகுமான் (வயது34) வியாபாரம் நடத்த தமீம் என்பவரிடம் கடன் வாங்கி கடையை நடத்தி வருகிறார். இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பணம் கேட்டு தமீம் மற்றும் 21 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்களுடன் சென்று தகராறு செய்து அரிவாளால் வெட்டியுள்ளனர். வெட்டுபட்டு படுகாயம் அடைந்த ஆசிக் ரகுமான் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரிவாளால் வெட்டிய நபர்கள் மீது சரக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


