உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்.
திருச்சி மாநகராட்சி 36, 37ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முாம் அரியமங்கலத்தில் உள்ள மண்டலம் மூணு அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும், இந்த முகாமிற்கு மாநகர செயலாளர் மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன் முன்னிலை வகித்தார்.
மேலும், இந்த முகாமில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.
மேலும் முகாமில் வருவாய் துறை சார்பாக அரியமங்கலம் லட்சுமிபுரத்தை சேர்ந்த பிரதாபன் பூரன் என்பவருக்கு பட்டாவை வழங்கியும் மேலும் இதே போல் மாநகராட்சி சார்பாக காலி மனை வரி விதிக்கப்பட்ட சகஷ்கர லட்சுமி என்பவருக்கு அதற்கான வரி ரசீதை வழங்கினார்.
மேலும் இந்தமுகாமில் உள்ள 13 துறைகளின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகிய 43சேவைகளின்அரங்குகள் அமைக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு இடம் பொதுமக்கள் வழங்கும் மனுக்களை பெற்று அதற்கு உடனடி தீர்வு எட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்.
முகாமில் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், கார்த்தி, வருவாய் கோட்ட அலுவலர் அருள், தாசில்தார் சக்திவேல், முருகன், உதவி ஆணையர் சரவணன் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன் இளைநிலை பொறியாளர் ஜோசப்.


