அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில், 3 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இன்று கொடியசைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் 3 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இன்று (11.08.2025) கொடியசைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலெட்சுமி அவர்கள், மண்டல தலைவர் மதிவாணன்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார், துணை மேலாளர்கள் சாமிநாதன், புகழேந்தி ராஜ், ராஜேந் திரன் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

