ஆர்.டி.ஓ., ஆபீசை பூட்டிய விவசாயிகள்; கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம்

0 7

திருச்சி: நேற்று (08.08.2025) திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., தலைமை வகித்தார். கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போதும், ஆர்.டி.ஓ., மற்ற விவசாயிகளை வைத்து கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார். போராட்டம் நடத்திய விவசாயிகள், சின்ன சூரியூரில், 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்ததை கண்டித்தது கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆர்.டி.ஓ., அலுவலகத்தின் கேட்டை பூட்டினர்.

இதையடுத்து அங்கு வந்த திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு, இரண்டு மணி நேரம் நடந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.