போலந்து ஈட்டி எறிதல் போட்டியில், ‘தங்கம்’ வென்ற அன்னு ராணி.

0 5

ஸ்செசின்: போலந்தில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் அன்னு ராணி 32, பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 60.95 மீ., துாரம் எறிந்தார். அடுத்த வாய்ப்பில் அதிகபட்சம் 62.59 மீ., துாரம் எறிந்தார். மற்ற 4 வாய்ப்புகளில் (59.89, X (பவுல்), 55.66, 60.07) ஏமாற்றினார்.

இருப்பினும் முதலிடம் (62.59) பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். துருக்கியின் எடா (58.36), ஆஸ்திரேலியாவின் லியான்னா (58.24) அடுத்த இரு இடம் பெற்றனர்.

இரண்டு ஆண்டில், கடந்த 2023 ஆசிய விளையாட்டில் 62.92 மீ., துாரம் எறிந்து, தங்கம் வென்றார் அன்னு ராணி. தற்போது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா, 2 நிமிடம், 02.95 வினாடி நேரத்தில் வந்து, மூன்றாவது இடம் பிடித்தார். 400 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜிஸ்னா மாத்யூ (54.12 வினாடி) 6வது இடம் பெற்றார். ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தென்னரசு (45.82, தமிழகம்), 5வது இடம் பெற்றார். ஆமோஜ் ஜேக்கப் (46.18), ராஜேஷ் ரமேஷ் (46.94), 8, 12வது இடம் பிடித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.