பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.2,500 லஞ்சமாக வாங்கிய விஏஓ கைது.

0 9

திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் கூலித்தொழிலாளியிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஒ) ஆக ரமேஷ்(47) பணியாற்றி வருகிறார். அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி கார்த்திகேயன்(37) என்பவர் தனது நிலத்தைசர்வே செய்து பெயர் மாற்றத்துடன் பட்டா கேட்டு விஏஓ.,விடம் விண்ணப்பித்தார்.

இதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என ரமேஷ் கேட்டுள்ளார். பணம் கொடுக்காததால் 3 முறை கார்த்திகேயன் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு ரூ.2,500 லஞ்சம் தருவதாக கூறிய கார்த்திகேயன் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.

அவர்கள் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூ.2,500 பணத்தை விஏஓ அலுவலகத்தில் வைத்து ரமேஷிடம் கார்த்திகேயன் கொடுத்தார். அங்கு மறைந்துஇருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார் ரமேஷை கைது செய்தனர். லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடக்கிறது. விஏஓ அலுவலகத்தை மூடி விசாரணை நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.