திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் மதிவாணன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு.

0 25

 

திருச்சி

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இருந்து துணை மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது.

 

மேயர் அன்பழகன் தலைமை வகித்தார் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டம் தொடங்கியவுடன் மண்டல குழு தலைவர் மதிவாணன் பேசுகையில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அரியமங்கலம் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.

 

இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்பது பல வருட கோரிக்கையாக உள்ளது. அதனை அகற்ற வேண்டும் என திருவரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்படும் கோழி கழிவுகளில் இருந்து மீன் தீவனம் தயாரிக்கும் பணி நடப்பதற்கான இடம் அங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து துணை மையம் திவ்யா மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், ஜெயநிர்மலா மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவு கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுனசிலர்கள் என 20க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர் மேயர் அன்பழகன் சமரசத்தை ஏற்காமல் இவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
 திமுக பெரும்பான்மையாக உள்ள திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து துணை மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் வெளிநடப் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.