திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்கள் இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (16.07.2025) திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை பயணிகள் பயன்படுத்தும்’ வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்து பேருந்து முனையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் 09.05.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப்பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று (16.07.2025) காலை 6 மணி முதல் நகர் மற்றும் புறநகர் பேருந்து சேவைகளை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பேருந்தில் ஏறி பயணிகளுடன் கலந்துரையாடினார்.
இப்புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தினசரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் முக்கிய நகர்ப்புற வழித்தடங்களான பாலக்கரை, தில்லைநகர், உறையூர், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், வயலூர் ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவெறும்பூர், துவாக்குடி, ஆகிய வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப பகல் மற்றும் இரவு நேரங்களில் போதுமான பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வழித்தடங்களில் அதிகாலை 3.00 மணி முதல் காலை 10.00 வரை தற்சமயம் இயக்கப்படும் நடைகளை விட கூடுதலாக 196 நடைகள் அதிகரித்து இயக்கப்பட உள்ளது.
மேலும் இப்புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து நினசரி அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட முக்கிய நகரங்களான தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கண்ணி. புதுக்கோட்டை, இராமேஸ்வரம், சென்னை, பெங்களுரு, நாமக்கல், சேலம், கரூர், கோயம்புத்தூர். திருப்பூர், திண்டுக்கல், பழ குமு பழனி, குமுளி, மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி மற்றும் செய்யப்படுகிறது. ஆகிய மார்க்கங்களில் புறநகரப்பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இப்புதிய பேருந்து முனையத்தில் 24 மணி நேரமும் அலுவலர்கள் பரிசோதகர்கள் மற்றும் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டு பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சீரான பேருந்து இயக்கம் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் அவர்கள், மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி. அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன், அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி தீபிசானு, அவர்கள், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு..ஸ்டாலின் குமார் அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் நிர்வாக இயக்குநர் திரு.கூதசரதன் அவர்கள், மண்டல பொதுமேலாளர்கள் திரு.சிங்காரவேலன், திரு.சதீஷ்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ர.ராஜலட்சுமி, மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், போக்குவரத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


