சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,880க்கு விற்பனை!!

0 4

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,610க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.12 உயர்ந்து ரூ.330க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,880க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சம் அடைந்துள்ளது.

சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்வை கண்டு வருகிறது. உலகளாவிய பொருளாதார நிலவரங்கள், டாலர் மதிப்பு மாற்றம் போன்றவை தங்கம் விலையை பாதித்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,280 உயர்வு கண்டுள்ளது.

நேற்று ரூ.1,05,840க்கு ஒரு சவரன் தங்கம் விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,08,880 ஆக ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.160உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.330க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

சோலார் தகடுகள் தயாரிப்பு, எலக்ட்ரிக் கார் தயாரிப்பு, 5ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், செமி கண்டக்டர் சிப்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதும், தேவைக்கும், விநியோகத்துக்கும் இடைவெளி ஏற்படுவதும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.