உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல் பிரதமர் மோடி விரைவில் புதுவை வருகை.

புதுச்சேரி: பிரதமர் மோடி விரைவில் புதுச்சேரி வரவிருப்பதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
அண்மையில் புதுச்சேரி வந்த குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமருடன் புதுவையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி துணைநிலை ஆளுநர் பேசியுள்ளார். அதைப்பற்றி ஆளுநர் என்னிடம் கூறினார். விரைவில் மகத்தான திட்டங்கள் புதுவைக்கு வர உள்ளது. பிரதமர் புதுவைக்கு வரும்போது அந்த திட்டங்களுக்கு செயல்வடிவம் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.

